Thursday, September 24, 2009

நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளிய வாலிபருக்கு 'தர்ம அடி'

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற தனியார் ஜுவல்லரி விழாவில், நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளிய வாலிபர், "தர்ம அடி' வாங்கினார். திருச்சி சின்னக்கடைவீதியில், "ஜோஸ் ஆலுக்காஸ் அண்டு சன்ஸ்' ஜுவல்லரி இரண்டாமாண்டு துவக்க விழா, நேற்று காலை நடைபெற்றது.


இதில், நடிகை சினேகா பங்கேற்றார். விழா முடிந்ததும், கடை மேடையிலிருந்து, நடிகை சினேகா கீழே இறங்கினார். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென சினேகாவின் இடுப்பை கிள்ளினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சினேகா, கடை உரிமையாளரிடம், இடுப்பை கிள்ளிய நபரை அடையாளம் காட்டி, கிளம்பிச் சென்றார். அங்கிருந்து ஓட்டமெடுத்த வாலிபரை, "தர்ம அடி' கொடுத்த பாதுகாப்புப் பணியா ளர்கள், அவரை, கடைக்கு இழுத்து வந்தனர். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், "வாலிபரை எதற்கு அடிக்கிறீர்கள்?' எனக் கேட்டனர்.

அதற்கு அவர்கள் பதிலளிக்காமல், போலீசாரை ஒருமையில் திட்டி, வாலிபரை இழுத்துச் சென்றனர். போலீசார், வாலிபரிடம் விசாரித்தனர். அவர், திருச்சி மேலசிந்தாமணியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்பதும், சினேகாவின் இடுப்பை கிள்ளிய விவரமும் தெரிந்தது.
சுரேஷ்குமாரை, போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். தங் களை ஒருமையில் திட்டியதால், பாதுகாப்புப் பணியாளர்களையும், போலீஸ் ஸ்டேஷன் வருமாறு அழைத்தனர். கடை உரிமையாளர் சமாதானப்படுத்தியதால், அவர்களை விட்டு விட்டனர். சினேகாவின் இடுப்பைத் தன் கணவர் கிள்ளவே இல்லை என, சுரேஷ் குமார் மனைவி ஷர்மிளா கூறினார்.


ஷர்மிளா கூறியதாவது: நானும், என் கணவர் சுரேஷ்குமாரும் நேற்று காலை தீபாவளி பர்ச்சேசுக்காக சின்னக்கடைவீதி சென்றோம். அப்போது, நடிகை சினேகா பங்கேற்ற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென, "புளூ கலர் சட்டை போட்டவர், என் இடுப்பைக் கிள்ளினார்' என, சினேகா கூறியதாகத் தெரிகிறது. விழா நடந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் என்னுடன் நின்றிருந்த என் கணவர் சுரேஷ்குமாரை, கடை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர்.


இதில், என் கணவர் சட்டை கிழந்தது. "தவறு ஏதும் செய்யாத என் கணவரை அடிக்காதீர்கள்' என நான் அழுதும், கடை ஊழியர்கள் தொடர்ந்து தாக்கினர். "இதைப் பார்த்து ஏன் அடிக்கிறீர்கள்?' என கேட்ட போலீசையும், கடை ஊழியர்கள் தள்ளி விட்டனர். என் கணவர் மீது பொய்யான புகார் கூறிய நடிகை சினேகா, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன். நடிகை சினேகா செல்லுமிடங்களில் எல்லாம் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று நடந்து கொள்கிறார். என் கணவரைத் தாக்கிய கடை ஊழியர்கள் மீது கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளதன் பேரில், மூவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இவ்வாறு ஷர்மிளா கூறினார்.

Source - Dinamalar